எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, April 24, 2017

திருஅண்ணாமலை சித்தர்கள் - 2

சுற்றிப் பார்த்தால் பெருங்காடு.

கண்ணிற்க்கு எட்டிய தூரம் பசுமையான,அதே சமயம் பிரம்மாண்டமான மலைக்குன்று.மலைப் பெய்தாலும்,பெய்யா விட்டாலும் மலையின் நாலா பக்கங்களிலும் வெள்ளி வருக்கி கொட்டுவது பொல் அங்காங்க்கெ அருவிகள் கொட்டிக் கொண்டுருக்க..அந்த மலையில் உள்ள பறவைகள் எல்லாம் கூட்டம் கூட்டமாக தங்களூக்குள் எழுப்பிய கீச்சு கீச்சு சத்தம் நன்றாகவே எதிரொலித்தது.


மான்களும்,மயில்களும்,முயல்களும் ஆனந்த்தோடு அங்கும் இங்கும் சுதந்திரமாக நடாமாடிக் கொண்டுருந்தன.தங்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்ற சந்தோஷப் பெருமூச்சு அவைகளிடம் நன்றாகவே காணப்பட்டது.


தென்றல் காற்று அருவியில் லேசாக நனைந்துகொண்டு,அந்த காட்டில் ஆங்காங்கே பூத்திருந்த நறுமணப் புஷ்பங்களைத் தொட்டு சீண்டிவிட்டு, அந்த புஷ்பங்களுக்கும் தெரியாமல் அவற்றின் வாசனையை திருடியபடி அந்த காட்டில் தட்டாமாலை போல் சுற்றி சுற்றி வந்து கொண்டுருந்தது.

இந்த வர்ணனைகளுக்கு சொந்தக்கார இடம் தான் திருவண்ணாமலைக்காடு.


இந்த அருமையான காட்டில் ,புஷ்பத் தோட்டத்திற்க்கு நடுவில் அமைதியாக அருணாசலேஸ்வரர் ஆனந்தமாக தன் தேவியுடன் அமர்ந்து கொண்டுருந்தபோது.....

சித்தர்களின் முக்கியமானவரான அத்திரி மகரிஷி  அங்கு வந்தார்.

"என்ன வேண்டும் அத்திரியாரே?" - சிவபெருமான் கேட்டார்.

"தங்கள் தரிசனமும் அருளாசியும் வேண்டும்.கைலாயத்துக்குக் சென்று அங்கு தரிசனம் பெறலாம் என்று எண்ணினேன்.நந்திதேவர்தான் தாங்கள் இங்கு இருப்பதாக சொன்னார்.ஆகவே நேரடியாக இங்கு வந்து விட்டேன் தேவா !".

"மகிழ்ச்சி ! சித்தராகிய உனக்கு வேறு என்ன வேண்டும்?".

"சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீகளே....?".  .....    "தாராளமாக சொல்லலாம்!"

"சித்தத் தன்மையோடு தங்கள் ஆசீர்வாதத்தால் நானூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்து கொண்டுருக்கிறேன்.ம்ம்...இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி தனிமையில் நான் உலா வருவது?.எனக்கென்று ஒரு துணைவி வேண்டும்.அவள் மூலம் எனக்கு வாரிசு வேண்டும்.இதைத்தான் தாங்கள் கருணை கூர்ந்து எனக்கு அருள வேண்டும்" என்றார் அத்திரி மகரிஷி.

"நியாயம்தான்.ஆனால்,சித்தர்களுக்கெல்லாம் முதல் சித்தரான தங்களே இங்கு உண்ணாமலை அம்மனோடு இல்லறவாழ்க்கை நடத்து கிறீர்கள்.  போதாக்குறைக்கு தங்களுக்கு வாரிசும் உண்டு.  தங்களுக்கே இந்த பாக்கியம் கிடைத்திருக்கும்போது சாதாரண சித்தனான எனக்கும் ஆசை இருக்காதா?" என்று பவ்யமாக வேண்டுகோள்  விடுத்தார் அத்திரி சித்தர்.

இந்த பதில் அருணாசலேஸ்வரருக்கு ஏற்புடையதாக இல்லை.இதை விட ,முக்கண்ணன் அருகில் இருந்த உண்ணாமலை தேவிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.வெறுப்புற்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"அத்திரி மகரிஷியே ! உனக்குள்ள தவ வலிமையின் பலம் என்ன தெரியுமா? நான் சொல்கிறேன்..கேள் ! மண்ணைப் பொன்னாக்கும் ரசவாத வித்தயை கற்றிருக்கிறீர்.நினைத்தால் வான் வீதியில் யார் கண்ணுக்கும் புலப்படாத வண்ணம் பூமியில் இருந்து வானுலகத்திற்க்கு பறந்து செல்லும் அற்புதம் உன்னிடம் இருக்கிறது.அப்படித்தானே.....?"

"ஆமாம் !"

"அப்புறம்... மனிதர்களை எந்த விச ஜந்து தீண்டினாலும் அவர்கள் உன்னிடம் வந்தால் மறுபடியும் உயிர் கொடுக்கும் அபாரமான ஆற்றல் இருக்கிறது...."

"நான் இவற்றை இல்லையென்று சொல்லவில்லயே...!"

"பிரம்மாவுக்குப் பிறகு மனிதர்களது உயிர் காக்கும் வித்தையைக் கற்றதால்,உன்னை இரண்டாவது பிரம்மா  என்று தேவலோகத்திலும்,மண்ணுலகிலும் போற்றிப் புகழ்கிறார்கள்.இது யாருக்கும் கிடைக்காத பாக்கியம் ஆயிற்றே...!"


இதைக்கேட்டு வியந்துபோன சிவபெருமான்,"அத்திரியாரே ! தாங்கள் ஒரு சித்தர் என்பதை மறந்து விட்டீர்கள் என எண்ணுகிறேன்.தங்களது சித்தத்தன்மை எப்பேர்பட்டது ! அதை விட்டு விட்டு,ஒரு சராசரி மானிடன் போல் இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளப் போவதாகச் சொல்கிறீர்களே?" என்றார் அமைதியாக.

"இவை எல்லாம் உண்மை... உண்மைதான் ! ஆனால்!,இதெல்லாம் தாங்கள் கொடுத்த பிச்சை தேவா ! "

"இருக்கலாம்...உன்னுடைய தவத்திற்கு கிடைத்த பரிசு இவை என்று ஏன் எண்ணக்கூடாது? அப்படியிருக்க... இத்தனை தகுதிகளையும் தூக்கி எறிந்து விட்டு இல்லற வாழ்க்கை மேற்கொள்ளப் போவதாகச் சொல்கிறாயே...!".

"இத்தனை தகுதிகளைவிட,இல்லற வாழ்க்கையில் ஒரு நல்ல கணவனாக ஒரு வாரிசுக்குத் தந்தையாக இருக்க வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக என் மனதில் வந்திருக்கிறது.இதை தாங்கள் இந்த திருவண்ணாமலை புண்ணிய பூமியில் வரமாகத் தந்தருள வேண்டும்" என்று மீண்டும் பிடிவாதமாக அத்திரி மகரிஷி தொடர்ந்தார்.

"யோசித்துத்துதான் சொல்கிறாயா?"

"ஆமாம் !"

"சரி...உன் தலைவிதியை மாற்ற யாரால் முடியும்? நீ விரும்புகிறபடியே இல்லற வாழ்க்கை அமையும்.ஆனால்,நீ இதனால் அனைத்து   சித்தத்  தன்மைகளையும் இழப்பாய்.சரியா?"

"சந்தோஷமாக இழக்கிறேன்"

"அப்படியானால் இந்த திருவண்ணாமலையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள பாதையில் அமர்ந்து பிரம்மாவை நோக்கி தவம் செய்.தண்ணீர் கூட குடிக்கக் கூடாது.கண்ணை மூடித் தவம் செய்.உன் தவத்தின் பயனாக உனக்கு 'அனுசூயா' என்னும்  இளம்பெண் மனைவியாவாள்".

"வாரிசு பிறக்குமா தேவா?"

"அதைப்பற்றி இப்பொழுது சொல்ல முடியாது.அது,உன் பாடு.அது மட்டுமல்ல.நீ இப்போது சித்தத் தன்மையை இழந்து விடுகிறாயோ..அப்போது முதல் சாதாரணமாக குடிமகனாக மாறிவிடுவாய்.அதன்பிறகு என்னிடம் இப்படி நேரில் பேச இயலாது.தவம் செய்து மறுபடியும் சித்தநிலை அடைந்த பிறகே என்னிடம் பேசலாம்" என்றார்,அருணசலேஸ்வரரான சிவபெருமான்.

அடுத்த விநாடியே அத்திரி மகரிஷியான சித்தர்  அத்திரிநாதனாக சாதாரண குடிமகனாக மாறினார்.சிவபெருமான் சொன்னபடியே திருவண்ணாமலை மீதுள்ள குகையில் அமர்ந்து தவம் செய்யலானார்.

(சித்தர்கள் வருவார்கள்...)

No comments:

Post a Comment