எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, April 24, 2017

திருஅண்ணாமலை சித்தர்கள் - 3

அத்திரி மகரிஷி திருவண்ணாமலையில் தவம் இருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டு வானத்து தேவர்களும், பூமியில் உள்ள ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும்  திருவண்ணாமலையில் ஒன்று கூடினார்கள்.

தனக்கென்று ஒரு தனித் தகுதியை வளர்த்துக் கொண்டு அஷ்டமா சித்திகளையும் பெற்றவர்...ஊருக்கெல்லாம் குண்டலினி சக்தியை சொல்லிக் கொடுத்தவர்... இன்று தெய்வங்களுக்கு நிகரானவர் என்று பாராட்டு பெற்றவர்... இவ்வளவு உயர்ந்த பீடத்திலிருந்து கடந்த 400 ஆண்டுகளாக காலமாக பொதுமக்களுக்கும் அருந்தொண்டாற்றி வருகிறவர், எதற்காக தவம் செய்கிறார்? என்பது நிறைய பேருக்குப் புரியவில்லை.

ஆனால் - அத்திரி ரிஷியோ இதைப் பற்றிக் கவலைப்படவில்லை.ஆலமரத்தின் விழுதுகளில் தலை கீழாகத் தொங்கி தவம் செய்ய ஆரம்பித்தார்.

அவரது தலைக்கு கீழே அக்னி தேவனால் உண்டாக்கபட்ட ஹோம குண்டம் இருந்தது.அதில் இருந்து அக்னி வெளியே வந்து கொண்டுருந்தது.பல்வேறு வாசனைத் திரவியங்கள்.140 மூலிகைகள்,202 பச்சை  மூலிகைகள்,அரசமித்து,தாமரைப் புஷ்பங்கள் எல்லாம் மூட்டை மூட்டையாக அந்த ஹோம குண்டத்தில் தானாக கொட்டிக்கொண்டிருந்தன. இந்த மூலிகைகளின் நறுமன வாசம் திருவண்ணாமலை முழுவதும் பரவி எல்லோரையும் சுண்டி இழுத்தது.

இதுதான் ரகசியம்...


கண்ணை மூடிக் கொண்டு ஆலமரத்து விழுதின் உதவியோடு,கீழே அக்னி குண்டத்திற்க்கு மேல் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தாலும் ,தன்னைக் காண வந்த பொது மக்களது மனக் குறைகளையும் ஞானக் கண்ணால் அறிந்தார் அத்திரி.

"சித்தர் பெருமானே ! கீழிருக்கும் அக்னியின் வேகத்தை அருகில் நிற்கும் எங்களாலேயே தாங்க முடியவில்லை.தாங்களோ அக்னி குண்டத்திற்க்கு நேராக தலை கீழாகத் தொங்கி தவம் செய்கிறீர்கள்..இது எப்படி பெருமானே?என்று,கை கூப்பி அத்திரி மகரிஷியைப் பார்த்து கேட்டார் ஒரு பக்தர்.

அந்த பக்தனது காதில் அத்திரி மகரிஷி ஒரு அதிசயத்தை சொன்னார்.

"என்னை அக்னி பகவான் சுட்டெரிக்க மாட்டான்.அவன் தண்ணீராக மாறி,ஒரு நீருற்றுப் போல் எனக்கு குளிர்ச்சியைத் தருகிறான்.ஏனென்றால் அவனது வேண்டுகோள் பலவற்றை நான் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறேன்..."

"அப்படியென்றால்,எங்களுக்கெல்லாம் இந்த வெப்பம் தாங்கமுடியவில்லையே...."

"அவ்வளவுதானே...இன்னும் 1/2 விநாடியில் இதே அக்னி உங்களுக்குத் தென்றலாக மாறி விடுவான்...பாரேன்" என்று அத்திரிச் சித்தர் சொன்ன மறு  விநாடியே, அந்த அக்னி குண்டத்தில் இருந்து அதுவரை வெப்பமாக வீசிக் கொண்டிருந்த அக்னி குளிர்ந்த காற்றாக வீசத் தொடங்கியது.

அத்திரி எவ்வளவு பெரியச் சித்தர் என்று திருவண்ணாமலையில் உள்ள அத்தனை பேரும் வியந்து போனார்கள்.சிவனின் திருவிளையாடல்


இந்நிலையில் அத்திரி மகரிஷியின் தவத்தை கலைப்பதற்காகவோ அல்லது அவர் எப்பேர்பட்ட மகத்தான சக்தியை பெற்றிருக்கிறார் என்பதை ர்,உலகத்திற்கு காட்டவோ என்னவோ அருணாசலேஸ்வரர் ஒரு திருவிளையாடலை நடத்தினர்.

அதையொட்டி இரண்டு எமகிங்கரர்களை அத்திரி மகரிஷி தவம் செய்யும் ஆலமரத்திற்க்கு அனுப்பி,யாரும் கண்டு கொள்ளாத நேரத்தில் அத்திரிக்கு தெரியாமல் அந்த ஆலமரத்து விழுதுகளை வெட்டி விடச் சொன்னார்.

இப்படி செய்வதன் மூலம்,அத்திரி சித்தர் தன் தவ வலிமையை கொண்டு எப்படி அதை தடுத்துக் கொள்ள போகிறார் என்பதை அறியவும் அவர் ஆவலாக இருந்தார்.இன்னொன்று....இப்படி பல தடைகளைப் போட்டால்தான் அத்திரி மிகவும் உறுதியாகவும்,ஆழமாகவும் தவத்தை மேற்கொள்வார் என்பது அவரது கருத்தாக இருந்தது.

தேவியின் கோபம்

அருணாசலேஸ்வரரது நாயகியான உண்ணாமலை அம்மனுக்கு,தன் கணவர் ஏன் இப்படி அத்திரி சித்தரை கொடுமை செய்கிறார்?அப்படியென்ன உலகத்தில் இல்லாத வரத்தை கேட்டார்?அவருக்கு ஒரு துணைவி வேண்டும் என்றுதானே கேட்டார்.கொடுத்துவிட வேண்டியதுதானே..? என்று வருத்தம் கலந்த கோபம் ஏற்பட்டது.

இதை அறிந்து கொண்ட அருணாசலேஸ்வரர்,"தேவி ! உன் மனதில் உள்ளதை யாம் அறிவோம்.எல்லோருக்கும் எல்லாம் வேண்டும்.அவர்கள் கேட்டதை உடனடியாகக் கொடுத்துவிட்டால் தவத்திற்க்கு மகிமை இருக்காது. சித்தர்களின் உச்சக்கட்டத்தை அடைந்த அத்திரி மகரிஷிக்கு எதற்காக இல்லறத்தில் நாட்டம் ஏற்பட்டது ? என்பது தெரியவில்லை. சித்தர்கள் எல்லாவற்றையும் தாண்டியவர்கள், ஆசாபாசத்தை வென்றவர்கள்.அப்படிப்பட்ட தூய்மையை யாரும் கெடுக்கக் கூடாது. அதிலும் அத்திரி போன்றோர்களுக்கு இப்படிப் பட்ட ஆசை வரலாமா?" என்றார்.

"இதை நான் ஏற்க மாட்டேன் சுவாமி?"

"ஏன்?"

"சித்தர்களுக்கு எல்லாம் முதல் சித்தராகிய தாங்கள் என்னுடன் இல்லறம் நடத்துகிறீர்கள்.தாங்களே அதை செய்து விட்டு அத்திரி மகரிஷியைப் போய் "தவம்கிட" என்று விரட்டி அனுப்பலாமா சுவாமி?" என்றாள் உண்ணாமலை அம்பாள்.

"ஏதோ சொல்லப் போனால் என்னையே குற்றம் சாட்டுகிறாயே தேவி.அத்திரி மகரிஷி மட்டும் எனது சோதனையில் வெற்றி பெறட்டும்.அவருக்கும் அனுசூயா என்னும் தலை சிறந்த சித்தப் பெண்மணி மனைவியாக அமைவாள்.இது நடக்கத்தான் போகிறது".

"அப்படியென்றால் எனக்கு மகிழ்ச்சிதான்" என்று தன் கோபத்தை சற்று குறைத்துக் கொண்டாள் அண்ணாமலைக்கரசி அம்மன்.

இதற்கிடையில் - 

அருணாசலேஸ்வரர்   உத்தரவிற்க்கு இணங்க ஓர் அமாவாசை நேரத்தில் இரண்டு எமகிங்கரர்கள் மாறு உருவத்தில் அத்திரி மகரிஷி தவம் செய்யும் ஆலமரத்திற்க்கு வந்தனர்.நீண்ட வாளால் அத்திரி மகரிஷி தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்த விழுதை பலமாக வெட்டினர்.மரத்தில் இருந்து விடுபட்டது விழுது.

ஆனால் அந்த விழுது கீழே விழாமல் அப்படியே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.அதன் வால் பக்கத்தில் அத்திரி சித்தரும் கீழே விழாது தொங்கிக் கொண்டிருந்தார்.இதைக் கண்டு வெலவெலத்துப் போனார்கள் அந்த இரண்டு எமகிங்கரர்களும்.

அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு வந்தார் அகத்தியர். 


ஆலமரத்தின் விழுதில் தலை கீழாகத் தொங்கி அத்திரி மகரிஷி தவம் செய்வதையும்,அந்த ஆலமர விழுது வெட்டப்பட்டு அந்தரத்தில் தொங்குவதையும் ,அத்திரி மகரிஷிக்கு கீழே ஹோம குண்டம் தீப்பிழம்பாக இருப்பதையும் கண்ட அகத்தியருக்கு திகைப்பு ஏற்பட்டது.

மிகச்சிறந்த தவசீலரான அத்திரி மகரிஷி இப்படி கடும் தவம் புரிவதற்கு என்ன காரணம் என்பதை தன் ஞானக் கண்ணால் கண்டார்.மிகச்சாதாரணமான எதிர்பார்ப்புக்காக அத்திரி மகரிஷி இப்படியொரு தண்டனை தேவைதானா?என்று எண்ணிய அகத்தியர்,தனது முழு பலத்தையும் பிரயோகித்து "அத்திரி சித்தரே ! தவத்தை கலையும்,உம் வேண்டுகோளை யாமே சிவ பெருமான் சார்பில் நிறைவேற்றுவோம்" என்று வாக்குறுதி கொடுத்தார்.

அதன்படி,அத்திரி சித்தர் தனது தவத்தைக் கலைத்தார்.

அவர் பூமியில் கால் பதித்த அடுத்த விநாடி,வெட்டப்பட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்த ஆலம் விழுது மீண்டும் மரத்தில் ஓட்டிக் கொண்டது.கொழுந்து விட்டு எரிந்து கொண்டுருந்த அக்னி சட்டென்று மறைந்தது.அந்த இடத்தில் நீருற்று ஒன்று   பீறீட்டு கிளம்பியது.அந்த நீருற்றீல் கங்கா தேவி காட்சி கொடுத்தாள்.அத்திரி மகரிஷி தன் முன் நின்று கொண்டிருந்த அகத்தியரின் பொற்பாதத்தில் விழுந்து வணங்கினார்.

அவரை தடவிக் கொடுத்த அகத்தியர்,"இந்த புனிதமான திருவண்ணாமலையில் எத்தனையோ சித்தர்கள் இருக்கிறார்கள்.எதிர்காலத்தில் இன்னும் பல சித்தர்களும் வருவார்கள்.கைலாயத்தில் இருந்த சிவபெருமான் இங்கு அண்ணமலையானாக மாறி அன்னை உண்ணாமலை அம்பளோடு ஆனந்தமாக, நிரந்தரமாக தங்கி இருக்கிறார்.அவரது அருள் எல்லோருக்கும் கிடைக்கப் போகிறது.இதற்கு நம் சித்தர்கள் அனைவரும் பக்க பலமாக இருக்க வேண்டும்.

அப்படியிருக்க,கேவலம் பெண்னாசைக்காக உன் அத்தனை தவச்சிந்தனைகளையும் இழந்து இப்படியொரு போர்க்கோலம் கொள்ளலாமா?நீ  பெண்னாசை பிடித்தவன் அல்ல என்பது எனக்கு தெரியும்.என்னை விட அருணாசலேஸ்வரருக்கு மிக மிக நன்றாக தெரியும்.பின்... எதற்கு இந்த நாடகம்?" என்று அத்திரி மகரிஷியை ஆதங்கத்தோடு கேட்டார். 

"சித்தர்களுக்கு எல்லாம் தலையாயச் சித்தரே ! தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை.இப்படியே சித்தானாக,மலையிலும்,சதுரகிரி மலையிலும்,தங்களது பொதிகை மலையிலும் நடமாடுவதை விட எனக்கென்று ஒரு வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.அந்த வாரிசை பன்மடங்கு என்னைவிட சித்தனாக்கி,அவனை ஒரு கடவுளாக ஆக்கி மாற்றிக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இதற்கெல்லாம் ஒரு துணை வேண்டுமல்லவா?அதனால்தான் இந்த தவம் செய்தேன்" என்றார் அத்திரி.

இதைக்கேட்டு அகத்தியர் வாய்விட்டுச் சிரித்தார்."எதற்கு தாங்கள் சிரிக்கீறீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று சற்று கோபத்தோடும், சந்தேகத்தோடும் கேட்டார் அத்திரி சித்தர்.

"அத்திரி! உன்னை மகா புத்திசாலி, நாலும் தெரிந்தவன் என்று நினைத்து விட்டேன்.ஆனால்..."

"உனக்கு சிவபெருமான் வாக்கு கொடுத்தாரா?"

"ஆமாம்!நீ தவம் செய்.உனக்கு அனுசூயா என்ற பெண் துணைவியாக வருவாள் என்றார்.


"மனைவியை அடையாளம் காட்டிவிட்டார்.அவ்வளவுதானே ! ஆனால் உனக்கு "ஆண்" குழந்தைதான் வாரிசாக பிறக்கும் என்று எங்காவது சொல்லிஇருக்கிறாரா?ஒருவேளை, உனக்கு வாரிசு பாக்கியம் இல்லை என்றாலோ அல்லது பெண் வாரிசு பிறந்தாலோ என்ன செய்வாய்? இதை நீ கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா?இதை நினைத்துதான் நான் சிரித்தேன்" என்றார் அகத்தியர்

"ஆமாம்...இப்பொழுதுதான் எனக்கே புரிகிறது.என்னை சிவபெருமான் மிக நன்றாக ஏமாற்றிவிட்டார்" என்று மௌனமாக முணுமுணுத்தார் அத்திரி.

'சரி...சரி...போனது போகட்டும்.உன் விருப்பப்படி இன்னும் 3 நாழிகையில் அனுசூயா தேவி இங்கு உன்னைத் தேடி வருவாள். அவளை அழைத்துக் கொண்டு நீ உடனடியாக சதுரகிரி செல்" என்று அடுத்ததாக சொன்னார் அகத்தியர்.


"எதற்கு?"


"இனிமேல் நீ இங்கிருந்தால் உனக்கு தவ வலிமை முன்பு போல் இல்லாமல் போய்விடும்.உன் சித்தத் தன்மை மிகவும் பிரசித்திப் பெற்றது.அது இந்த பூலோக மக்களுக்கு நன்கு பயன் பட வேண்டும்.இதற்கு அருமையான இடம் சதுரகிரிதான்.இன்னும் சில காலத்திற்கு அந்த மலைதான் உனக்கு ஏற்கிறது"

"அப்படியென்றால் இந்த திருவண்ணாமலையில் எனக்கு இடம் கிடையாதா?"

"ஏன் கிடையாது?ஆனால்,அக்னி சொரூபமாக விளங்கும் அருணாசலேஸ்வரருக்கு கோபம் வரலாம்".

"ஏன்"


"அவர் உன் மீது பரிவும்,பாசமும் கொண்டிருந்தார்.உன்னைக்கொண்டு இந்த திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வகையில் அதிசயங்களையும் செய்து காட்டி மக்களை வியக்க வைக்க ஆசைப்பட்டார்.ஆனால்,உன்னுடைய எண்ணமோ இப்போது வேறு விதமா திசை மாறிப் போயிற்றே..."
(சித்தர்கள் வருவார்கள்...)

No comments:

Post a Comment