எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, May 21, 2017

திருஅண்ணாமலை சித்தர்கள் - 5

மீன்களுக்காக போராடிய மச்சமுனி


 
 மச்சமுனிவர் எங்கே? என்று அண்ணாமலையில் எல்லோரும் தேடியபோது , திடீரென்று மச்சமுனிவர் செய்து காட்டிய தீயப்பிழம்பு சித்து வேலையைக் கண்டு சிவபெருமான் உள்பட அத்தனை பேரும் அதிசயித்துப் போனார்கள் ...,

அந்நேரத்தில்  , கைகூப்பி சிவபெருமான் முன்பு வந்து நின்றார் மச்சமுனிவர்.., அவரது தோற்றத்தைக் கண்டு எல்லோருமே.,அதிசயித்துப் போனார்கள் . 

முகத்தில் மட்டும் தாடி – மீசை , தலையில் ஜடாமுடி , மார்புவரை மனித உடம்பு .., இரண்டு கைகள் மட்டும் கூப்பிய நிலை.., கண்களிலே தீர்க்கமான ஒளி வெள்ளம் . மார்புக்கு கீழே மீன் போன்ற அமைப்பு .கால்களைக் காணவில்லை . ஆனால் செதிள் , செதிளாக தோற்றம் . சிவபெருமான் – உண்ணாமுலை அம்மன் பொற்பாதத்தில் மச்சமுனி விழுந்து வணங்கினார்.

“உன்னுடைய சித்து வேலையைக் கண்டு பிரமித்துப் போனேன் . எப்படி அந்த நான்கு ஒளிப்பிழம்பு வந்தது? என்று கேட்டார் அருணாச்சலேஸ்வரான சிவபெருமான்.

“அந்த நான்கும் என்னால் உண்டாக்கப்பட்ட அற்புதமான மூலிகைச் செடிகள் அந்த செடிகளுக்கு வானத்தை நோக்கிச் செல்லும் ஆற்றல் உண்டு. அதேசமயம் பூமியை நோக்கி கீழே விழுந்து விதவிதமான பொருளாக மாறும் சக்தியும் உண்டு. இது என் தவசக்திக்கு கிடைத்த பரிசு...,

              “இந்த நான்கிற்கும் ஏதேனும் பெயர்கள் இருக்கிறதா ?

இருக்கிறது அருணாச்சலேஸ்வரா! முதலாவது மூலிகைச் செடியின் பெயர் வெள்ளைப் புனல் , இரண்டாவது மூலிகைச் செடிக்குப் பெயர் கல்யாண முருங்கை , மூன்றாவது மூலைகைச் செடிக்குப் பெயர் காவன்எதிரிப் பேயச் சுரை , நான்காவது மூலைகைக்குப் பெயர் இருவரிக் கற்றாழை

“இது எந்த வகையைச் சேர்ந்தது ?

“செடி , மர வகையைச் சேர்ந்தது , அவற்றை உயிர் கொடுக்கும் மூலிகை இனமாக மாற்றியிருக்கிறேன்.

“இது எப்படி உயிரைக் காக்கும்? “

அருணாச்சலேஸ்வரா ! தாங்களும் , மற்றவர்களும் அனுமதி அளித்தால் இந்த நான்கு மூலிகைகளை தங்கள் முன்னே செயல்பட வைக்கிறேன்..

“மச்சமுனி... அது ஒரு பக்கம் இருக்கட்டும்.., நீயோ மனிதமுகமும் , மீனின் உடல் அமைப்பும் கொண்டிருக்கிறாய் . இது எப்படி? இந்த உருவத்தை வைத்துக் கொண்டு உன்னால் சித்த நிலையை எப்படி அடைய முடிந்தது ..?

“ஜயனே ! தாங்களே இப்படியொரு வரத்தை அன்றைக்கு கைலாயத்தில் எனக்கு கொடுத்து விட்டு ., இப்போது ஏதும் அறியாதவர்போல் ., கேள்வி கேட்கிறீர்களே..... இது நியாயமா?.. என்று மச்சமுனி பவ்வியமாக கேட்டபோது அகத்தியர் குறுக்கிட்டார்...,

“மீன்கள் எல்லாம் நீரில் இருக்கும்போது ஆனந்தமாக வாழ்கின்றன .., ஆனால் அவை தரையில் விழுந்த போது துடிதுடித்து இறந்து விடுகின்றன. ஒரு சமயம் இயற்கையின் சூழ்நிலை காரணமாக கடல்கள் வற்றியது. இதனால் மீன்கள், திமிங்கலங்கள் , சுறா போன்றவை இறந்த, ஆனால் அதே சமயம் நீருக்குள் வாழ்ந்து கொண்டிருந்த ஆமைகள் மட்டும் பிழைத்துக் கொண்டன.

      ஆமையைத் தவிர மற்ற கடல்வாழ் பிராணிகள் தரைக்கு வந்த போதும், கடல் நீர் வற்றிய போதும் துடிதுடித்து இறப்பைதைக் கண்ட இந்த மச்சமுனிவர் தானே மச்ச உருவமாக மாறி கடுமையாகத் தவம் புரிந்தார்... என்று அகத்தியர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.....,

        “எதற்கு தவம் புரிந்தார்?“ என்று, வேண்டும் என்றே ஒன்றும் அறியாதவர் போல் கேட்டார் சிவபெருமான்.   “ அருணாச்சலேஸ்வரா! இதுவும் தாங்கள் அறியாததா?. ஏன் இந்த நாடகம்?“ என்று கேட்ட அகத்தியர்.., “கடல் வாழ் ஆமைகளைப் போல் கடல் வாழ் மீங்களுக்கும் கடலிலும் உயிர் இருக்க வேண்டும். தரைக்கு வந்தாலும் எல்லா மீன்களும் உயிரோடு இருக்க வேண்டும். ஆமைக்கு ஒரு நீதி மீனுக்கு ஒரு நீதியா? என்று போராடினார் இந்த மச்சமுனிவர்....

       “அப்படியா நடந்ததி? பிறகு...? என்று அப்போது திருவாய் மலர்ந்து ஆச்சரியத்துடன் கேட்டாள் சிவன் பக்கத்தில் இருந்த உண்ணாமுலை அம்மன். 

                “பிறகு என்ன... சிவபெருமானாகிய இவர் வாய் திறந்து பேசவில்லை.. மீன்களுக்குத் தக்க நீதியும் கிடைக்கவில்லை...,  எனவே மச்சமுனிவர் வருண பகவானை வேண்ட... வருண பகவான் மழையாகப் பொழிந்தார் கடலில் நீர் பெருகியது. தண்ணீர் இல்லாமல் துழிதுடித்துக் கொண்டிருந்த அத்தனை மீன்களுக்கும் உயிர் வந்தது. இல்லை மச்சமுனி?“ என்று அகத்தியர் மச்சமுனிவரைப் பார்த்துக் கேட்டார்.

     “அகத்தியர் சொல்வது , அத்தனையும் உண்மை.., ஆனால் இன்னமும் சிவபெருமான் என் வேண்டுகோளை ஏற்கவில்லை.. இன்றைக்கும் மீன்களின் கதி அப்படியேத்தான் இருக்கிறது... என்று மிகவும் வருத்தப்பட்டார் மச்சமுனி...

        அப்போது.....
               “ஸ்வாமி..... என்றாள் பார்வதி தேவியான உண்ணாமுலை அம்மன்.. “என்ன...? என்று புருத்தாலேயே பதில் கேட்டார். சிவபெருமான்.. “இந்த மச்சமுனி கேட்பது நியாயம் தானே? ஆமைக்கு ஒரு நீதியும் ,மீனுக்கு ஒரு நீதியும் இனுயும் இருக்க வேண்டாமே..  பேசாமல் மீன்களுக்கும் தரையில் உயிர் கொடுத்து விடுங்களேன் என்றாள் தேவி உண்ணாமுலை அம்மன்.

    இதைக் கேட அருணாச்சலேஸ்வரர் கடகடவென்று சிரித்தார்.. அகத்தியர் உள்பட அங்குள்ள அனைவருக்கும் சிவபெருமான் சிரிப்பதற்குரிய காரணம் தெரியவில்லை. சில விநாடிகள் அமைதியாக இருந்த அருணாச்சலேஸ்வரர் , “தேவி... சட்டென்று யாரையும் நம்பிவிடாதே! இந்த மச்சமுனி மிகப்பெரிய சித்தன். நிறைய தவத்தால் பல பெரும் சக்தியை வைத்துக்கொண்டிருப்பவன். என்னிடம் வேஷம் போடுகிறான்.. என்றார்..

“எப்படி? என்று தன் மீன் கண்களால் கேட்டாள் உண்ணாமுலை அம்மன்...

        இவன் செய்த தவத்திற்கு நாம் மசியவில்லை என்றதும் , வருண பகவானைக் கொண்டே வற்றிய கடலை நிரம்பச் செய்தானே.... அது மிகப்பெரிய ஆச்சரியம் இல்லையா....?

 “ஆமாம்....!  அன்றைக்கு கடல் வற்றி, துடித்துக் கொண்டிருந்த லட்ச்சக்கணக்கான மீன்களுக்கு கடலை உண்டாக்கி உயிர் கொடுக்க வைத்தானே... இது தெய்வ நிகர் சக்தி தானே...??

“ஆமாம் .... ஆமாம்!! “தனது போராட்டாம் நிறைவு பெறும் வகையில், இன்றுவரை உடம்பை மீனாக மாற்றி தலையை சித்தனாக வைத்துக் கொண்டிருக்கிறானே.... இது பெரிய சாதனை அல்லவா..

       “ஆ....மாம்!!             
              இப்படிப்பட்ட மச்சமுனிவன்.., இறந்தாலும் உயிர் கொடுக்கும் வகையில் யாருக்கும் தெரியாத வகையில் நான்கு வகை மூலிகைகளைக் கண்டு பிடித்தான்.. இவனால்ல் இன்றைக்கு ஒரு மீங்கூட தரையி வந்தாலும் இறப்பதில்லை., எந்த மீன் கரைக்கு வந்தாலும் இவன் இந்த நான்கு வகை மூலிகைகளில் ஏதேனும் ஒன்றைக் கொடுத்து காப்பாற்றிக் கொண்டு வருகிறானே.... இது யாருக்காவது தெரியுமா..? என்று அருணாச்சலேஸ்வரர் சொன்ன போது, அங்கிருந்த அனைவரும் மச்சமுனிவரது திறமையைக் கண்டு வியந்து அவரை நோக்கிக் கை கூப்பினார்கள்

     தொடர்ந்து ., “மச்சமுனிவரே! உன் நான்கு மூலிகைகளின் சித்த குணத்தை இப்போது இங்குள்ள எல்லோர் முன்னிலையிலும் காட்டு! என்றார் அருணாச்சலேஸ்வரர்.

எல்லாச் சித்தர்களும் அதைக் காண ஆவலோடு தயாரானார்கள்...

 (--- சித்தர்கள் வருவார்கள்...)


1 comment:

  1. ஓஃம் மச்ச முனிகள் திருவடிகள் போற்றி

    ReplyDelete