எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, May 22, 2017

திருஅண்ணாமலை சித்தர்கள் - 6

குழந்தை பாக்கியத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட “கல்யாண முருங்கை

மச்சமுனிவர் தான் கண்டுபிடித்த அதிசிய மூலிகைகள் மூலம் என்ன சித்து விளையாட்டை செய்து காண்பிக்கப் போகிறார் என்பதைக் காண திருஅண்ணாமலை மீது திரண்டிருந்த சித்தர்கள், தெய்வங்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர்.


அப்போது  :-    
               இது தான் வெள்ளைப் புனல் மூலிகை என்று ஒரு சிறு தாவரத்தை எடுத்துக் காட்டிய மச்ச முனிவர் “இதனுள் அடங்கியிருக்கும் அபூர்வமான சக்தி மூளை சமந்தமான நோய் எதுவாக இருந்தாலும் குணப்படுத்திவிடும் என்றார்..!

      “எப்படி? என்று கேட்டார் அருணாச்சலேஸ்வரர். கொஞ்சம் இருங்கள்.... என்று கூறிய மச்சமுனிவர் . அந்த மலைக்காட்டில் பித்து பிடித்தவன் போல் உடையில்லாமல், தாடியும், மீசையும் கொண்டு, குளிக்காமல் அழுக்கேறொய ஒரு ஆதிவாசி மனிதனை அங்கே கொண்டு வந்து நிறுத்தினார். நிர்வாண கோலத்தில் இருந்த அவனுக்கு மரத்தழைகளால் ஆடையை அணிவித்தார்.

  “இவன் சித்தப்பிரமை பிடித்தவன்., இந்த அண்ணாமலை வனத்தில் 40 வருடங்களாக இப்படியே அலைந்து கொண்டிருக்கிறாள். இவனது வாயில் இந்த வெள்ளைப் புனலைக் கசக்கி உங்கள் முன்பு விடப் போகிறேன்., ஒன்றரை நாழிகையில் இவன் சித்தப்பிரமை நீங்கி சாதாரண மனிதனாக மாறுவான்.. என்றார் மச்சமுனிவர்.
       
         தொடர்ந்து அவர், அந்த ஆதிவாசி மனிதனை நன்றாக கட்டிப் போட்டார். அவன் திமிறினான். பேந்த பேந்த விழித்தான். கை,கால்களை உதறிப் பார்த்தான் முடியவில்லை.., அவனை மச்சமுனிவர் தன் கண் பார்வையால் அடக்கினார்.

  தன் கையில் இருந்த வெள்ளைப்புனலை, கைகளால் கசக்கி, அதன் சாற்றை அவன் வாயிலும்,மூக்கிலும், அவனது இரண்டு கண்களிலும் ஒவ்வொரு சொட்டாக விட்டார் மச்சமுனி, மீதமுள்ள வெள்ளைபுனலின் சாற்றை எடுத்து அவனது உச்சந்தலையில் தடவினார்.

         சரியாக ஒன்றரை நாழிகை ஆயிற்று.!!

அதுவரை மயங்கிக் கிடந்த அவன் மெல்ல அசையத் தொடங்கினான். மெதுவாக அவன் வாயில் இருந்து “அம்மா..... என்ற சொல் முணகியபயே வந்தது..

        இவன் சித்தப் பிரமையில் இருந்து மீண்டுவிட்டான் அருணாச்சலேவரா... என்று அமைதியாகச் சொன்னார் மச்சமுனி,

 உண்மைதான்! அது என் ஞானக் கண்களுக்குத் தெரிந்து விட்டது.. என்று அருணாச்சலேஸ்வரர் சொன்ன போது அருகில் இருந்த பிரம்ம தேவருக்கு கோபம் வந்தது. “இந்த மச்சமுனி செய்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். விதியின்படி இவன் கடைசிவரை சித்தப்பிரமை பிடித்து தான் அலையவேண்டும். இதை மாற்றும் சக்தி மச்சமுனிக்கு இல்லை என்றார் பிரம்மா.

            இதைக்கேட்ட அருணாச்சலேஸ்வரர் ,பிரம்மாவை சமாதானப்படுத்தியதோடு, சித்தர்களுக்கு விதியை மாற்றும் வலிமை உண்டு. அதுமட்டுமல்ல...., இந்த ஆதிவாசி சதா சர்வகாலமும் என்னுடைய இந்த அண்ணாமலை காட்டிலே வலம் வந்து கொண்டிருந்தான். அதனால் , இந்த ஆதிவாசிக்கு “விதி மாறிவிட்டது நானே இதற்கு அனுமதியைத் தருகிறேன் என்றார்..

              இதைக் கேட்டு பிரம்மதேவன் அடங்கிப் போனார்...!!

           “இந்த ஆதிவாசி மனிதனை மறுபடியும் அவன் இருப்பிடத்திற்கே விட்டு விடுகிறேன்.  ஏனெனில் சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும் மட்டுமே தெய்வங்களை நேரில் கண்டு பேசலாம். மனிதர்கள் அந்த பாக்கியம் பெற நீண்டகாலம் தவம் செய்ய வேண்டும். இந்த ஆதிவாசிக்கு அந்தத் தகுதி இல்லை.. என்ற மச்சமுனிவர், அந்த ஆதிவாசியை தன் கைகளால் தூக்கிக் கொண்டு, அவனது பழைய இருப்பிடத்திற்கே கொண்டு போய் விட்டார்.

       பின்னர், தெய்வங்களை வணங்கிவிட்டு, “அடுத்ததாக நான் கண்டிபிடித்த கல்யாண முருங்கை இது என்று ஒரு காயை எடுத்துக் காட்டினார்...

      இதென்ன புதுமையான காயாக இருக்கிறதே... என்றார் அருணாச்சலேஸ்வரர்.

             ஆமாம் பிரபு எனது 50 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு கிடைத்த அற்புதமான பரிசு இது .,

             “இதை வைத்து என்ன சித்து வேலை செய்ய போகிறாய்?

“அருணாச்சலேஸ்வரா! இதுவும் பிரம்மாவுக்கு பிடிக்காத விஷயம் தான்

       இருந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ மனிதர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கொடுக்கலாம்.., ஆனால் கர்மா, என்றும் , விதி என்றும் மானிட மக்களை பழிக்குப்பழி வாங்குவது இந்த மச்சமுனிவருக்கு ப்டிக்கவில்லை. அவர்களது தலைவிதியை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த கல்யாண முருங்கையைக் கண்டுபிடித்தேன்....

               அப்போது பிரம்மா திடீரென்று குறுக்கிட்டார்.

“அதாவது .... எங்களுடன் இருந்து கொண்டு எங்களுக்கே “சதி செய்கிறாய் இல்லையா “மச்சமுனி என்று அவர் சற்று ஆத்திரத்தோடு கேட்டார்.

         “மன்னிக்க வேண்டும் பிரம்மதேவா! விதியை , பிரார்த்தனையினால் வெல்லலாம் என்று தாங்களே சட்டத்தில் ஒரு வழி வகுத்திக்க் கொடுத்திருக்கிறீர்களே... அது எப்படி நியாயமோ அதே போல் தான் நான் செய்வதும் நியாயம் !! என்றார் மச்சமுனி.

    “அடடா... உங்களுக்குள் என்ன சண்டை இப்போது? மச்சமுனி கண்டு பிடித்த கல்யாண முருங்கை எப்படி விதியை மாற்றப் போகிறது? அதைப் பற்றி விளக்கமே சொல்லாத போது, ஏன் அவசரப்படுகிறாய் பிரம்மதேவா.. என்று முக்கண்ணன் சற்று அதட்டிச் சொன்ன போது பிரம்மாவும் , மச்சமுனியும் அடங்கிப் போனார்கள்.

 “சரி மச்சமுனி... மேலும் சொல்....! என்று அருணாச்சலேஸ்வரர் சொன்ன பிறகு மச்சமுனி வாய் திறந்தார்...!!

  “ஐயனே! பிரம்மாவின் சட்டப்படி , மனிதர்கள் அவரவர் செய்த பாவ பலன்களுக்கு ஏற்ப திருமணம் ஆகிறது. திருமணத்தின் தத்துவமே வாரிசு உண்டாவது தான். ஆனால் சிலருக்கு திருமணமாகியும் குழந்தைகள் பிறப்பதில்லை.., அவர்கள் கோவிலைச் சுற்றுகிறார்கள் ., பரிகாரங்களைச் செய்கிறார்கள் ., விரதம் இருக்கிறார்கள்.., ஆனாலும் அவர்களுக்கு புத்திர தோஷம் நிவர்த்தி ஆவதில்லை. இதனால் மனநிம்மதி இழக்கிறார்கள்.. பலர் தற்கொலையும் செய்து , சண்டாளர்களாக மாறிவிடுகிறார்கள்.

 அப்படிப்பட்டவர்களுக்கு, கருவில் தோஷம் இருந்தால் அதை விலக்கவும் , அவர்களுக்கு வாரிசு பாக்கியம் கொடுக்கவும் இந்த புதிய தாவரத்தைப் படைத்து, பலருக்கு அவர்களையும் அறியாமல் உணவில் கலந்தும் கொடுத்துவிட்டேன்..

               “அப்படியா,,,...

   ஆமாம் ஐயனே! அதன் பலன் வயது அதிகமானாலும் அவர்களுக்குப் புத்திரப் பாக்கியம் கிடைத்திருக்கிறது... இது அதிசியம் தானே...?

“உண்மை தான்! ஆனால் சாதாரணமாக இருக்கிற கல்யாண முருங்கைக்கு அவ்வுளவு பெரிய சக்தி இருக்கிறதா?   
 “ஆமாம் ஐயனே!

“அப்படியென்றால் .. பிரம்ம தேவருக்கு படைக்கும் தொழில் பளு குறைந்துவிட்டது என்று கூடச் சொல்லலாம் இல்லையா மச்சமுனி ? என்று கேட்டார்.. அண்ணாமலையார்.

“ஐயனே... வெறும் கல்யாண முருங்கையினால் மட்டும் குழந்தை பிறக்காது. அதனுடன்.. வேறொரு ரகசிய மூலிகைகளும் கலந்து கொடுக்க வேண்டும். அது தெய்வீக ரகசியம்.. ஆனால் கல்யாண முருங்கைக்கு குழந்தையை உருவாக்கும் சக்தி இருக்கிறது என்றார் மச்சமுனி.

சரி... சரி.. இதையெல்லாம்.. இந்த மலையில் நேரடியாக நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை., மச்சமுனி சொல்வதை யாம் ஏற்றுக் கொள்கிறோம்...என்ற சிவபெருமான்...

          “மச்சமுனி சொல்வதைப் பார்த்தால் , இனி தெய்வங்களுக்கு எதிர்காலத்தில் வேறு வேலையே இல்லை என்பது போல்.. தோன்றுகிறதே !!! சித்தர்களுக்கு அப்படிப்பட்ட சக்தி இருக்கிறது உண்மைதான்...!

          என்று அருணாச்சலேஸ்வரர் சொன்ன போது அங்கிருந்த சித்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது....
       
(--- சித்தர்கள் வருவார்கள்)

No comments:

Post a Comment