எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

படித்ததை பகிர்ந்துள்ளேன்*THE DIVINE INFOZ WHICH I CAME TO SEE* I SAVED* ., FOR ALL BENEFIT OF KNOWLEDGE* SHARING HERE..,IF IT.., SUBJECTED TO *COPYRIGHT* KINDLY GIVE IN *COMMENT WILL REMOVE IT.., *இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, May 11, 2017

Osho வின் -- தாம்பத்ய பார்வை...!!!!


உங்களது காம ஆசைக்கு ஆதரவு கொடுப்பதற்காகவே ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நிர்வாணமான பெண் நீங்கள் கற்பனை செய்வதற்கு எந்த இடமும் கொடுப்பதில்லை. அதனால்தான் நிர்வாணமான பெண்கள்அந்த அளவுக்கு கவர்ச்சியாக இருப்பதில்லை.அதே போன்று நிர்வாணமான ஆண்களும் கவர்ச்சியாக இருப்பதில்லை. ஆனால்,ஒரு ஆணோ, பெண்ணோ ஆடைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் போது அவர்கள் உங்களது கற்பனைக்கு அதிகம் விட்டுவிடுகிறார்கள். இந்த ஆடைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று நீங்கள் கற்பனை செய்ய முடியும். நீங்கள் மீண்டும் கற்பனை செய்யலாம்.ஆனால், உங்களது மனைவியை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.அதுதான் சிக்கல். உங்களால் உங்களது பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை கற்பனை செய்து பார்க்க முடியும். அவள் கவர்ச்சியாக தெரிவாள்.! உங்களது மனைவியிடம் உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டதென்றால் உங்களுக்கு அவளது ஆன்மாவிற்குள் நுழைவது எப்படி என்று தெரியவில்லை.

நீங்கள் அவளது உடலில் நுழைய முடியும். ஆனால் அது விரைவில் சலிப்பாக ஆகிவிடும். ஏனெனில் அது ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வதாக இருக்கும். உடல் என்பது மேம்போக்கான விஷயம்.
நீங்கள் உடலோடு ஒருமுறை,இருமுறை,மூன்றுமுறை உறவு கொள்ளலாம். அதன்பிறகு அந்த உடலோடும், அதன் வளைவு நெளிவுகளோடும்  .,  உங்களுக்கு பரிச்சயம் ஏற்பட்டுவிடுகிறது. அதன் பின்னர் அங்கே எதுவும் புதிதாக இருக்காது.  நீங்கள் அடுத்த பெண்ணின் மீது ஆர்வம்  கொள்ள ஆரம்பித்து விடுகிறீர்கள்.

உங்களது மனைவியைவிட அவர்களிடம்  ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்களது ஆடைகளுக்குப் பின்னால்  அவர்கள் ஏதோ ஒன்றினை வித்தியாசமாக
பெற்றிருப்பார்கள் என்று  குறைந்தபட்சம் உங்களால் கற்பனையாவது  செய்து பார்க்க முடியும்.    "மக்கள் தங்களது மனைவி மற்றும் கணவன்களோடு சலிப்படைந்து விட்டனர்."    அதற்கான காரணம் ஒருவர் மற்றொருவரின்  ஆன்மாவோடு தொடர்பு கொள்ளமுடியாமல் போகின்றனர்.


நீங்கள் ஆன்ம நண்பர்கள் ஆகிவிடும்போது
அங்கே சலிப்பு என்பது இருக்கவே இருக்காது.
"அதனால்தான் தந்த்ரா மார்க்கமானது
எல்லா மனிதர்களுக்கும் கல்வியில் தேவையான ஒரு
பகுதியாக ஆகவேண்டும் என்று நான் கூறுகிறேன்.
" "தந்த்ரா என்பது ஆன்மாக்களோடு தொடர்பு கொள்கின்றன,
அடுத்தவரின் ஆழ்ந்த மையத்திற்கு செல்கின்ற ஒரு விஞ்ஞானம்."
"இந்த கலையை அறிந்துகொண்ட ஒரு உலகில்
மட்டுமே இந்த சலிப்பு மறைந்துபோகும்."

--- ஓஷோ---


No comments:

Post a Comment